Thursday, July 5, 2018

ஒளிந்துகொள்ள
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒற்றை கவிதையை ...

Tuesday, May 31, 2016


யாதுக்காய் அவதானித்தேன்
கேட்க வைத்து விடுகிறீர்கள்
அடிகடி

கதவிடுக்கில் கைவிரல் போல
நைந்து போன வெறுமையில்
எதை கற்பேன் நான்

இயல்புகலற்ற பயணத்தில்
விதிகளற்று வீழ்கிறேன்

அர்த்தங்கலோடே
அர்த்தமற்று  இருக்கிறேன்

சிதறிய வார்த்தைகளிலும்
சிதறாமல் வெறுமை

தேடி தேடி தொலைக்கிறது
இந்த வெறுமை
என்னை 

Friday, January 29, 2016



திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

உங்களில் நிரம்பி கொள்ளவும்
உங்களால் நிறைத்து கொள்ளவும்
திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

இயல்பு இது என்பதால்
இயல்பில்லாதவனாய்  ஆகி விடுகிறேன்

ஊர்வதில் தொடங்கி
வறண்டு விடுவது வரை
திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

என்ன மிச்சமிருகிறது
என்பதே மிச்சமாய் இருப்பதால்
திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

Sunday, May 17, 2015


நெடுநாளைக்கு பின்னாளான
 உன் புகைப்படத்துடன் ஆன
சந்திப்பிலும்
இயல்பாய்
இருக்க விடவில்லை
நீ 

Wednesday, December 4, 2013



யாருமற்ற வெளிகளில்
யாதை நான்
எனதாக்கி கொள்வது .....

யாருமற்று நான்
எதுவாகி போவது ....

எனதென்பது
எப்பொழுது
வெற்றிடம்
இல்லாமல் ஆகும் .....

விடை மறுப்பவர்கள்
யாராகிவிட முடியும் எனக்கு ......

Monday, April 22, 2013




மீள்வதில் உள்ள தயக்கம் 
மீட்பதில் இல்லை 

பார்வை விரியும் பகுதிகள் 
மீள்வதில்லை ஆசைகளை விட்டு 

வெற்றிடங்கள்  நிரப்புகின்றன 
நினைவு பக்கங்களை 

வார்த்தைகளாலேயே எப்பொழுதும் 
நிரப்பப்படும் வாழ்கையில் 
எழுத்து பிழைகளே 
வசந்த காலம் 

Monday, April 8, 2013



யாருக்கான காத்திருப்பு 
என்பதற்கான பதில் 
என்னிடம் இல்லை...

இறுதியில் 
எனக்காகவே 
எல்லா 
காத்திருப்புகளும் 
என்பதை 

யார் வந்து 
புரிய வைப்பீர்கள் 
எனக்கும் உங்களுக்கும் ...