Saturday, September 27, 2025



நீங்கள் நீங்களாய் 

இருக்கும் கவிதை வேண்டாம் 

நீங்கள் நானாய் இருக்கும் 

கவிதையின் 

மடியில் மட்டுமே 

உறங்குவேன் ....

Monday, July 7, 2025



 என் இரு சக்கர 

இறக்கையால் 

பறந்து வந்தேன்....


நீந்தி கடக்க 

எந்த புன்னகையும் 

இல்லை...


இறக்கையின் 

பெட்ரோல் மணத்தில்

எந்த புன்னகையையும் 

விதைகாமலேயே 

வந்துவிட்டேன்

எல்லாரையும் போல 

Saturday, July 5, 2025



 யாதிலும் யாதாயும் 

இருக்க இயலா 

களையாய் 

உங்களுக்கு...


பிழை திருத்தி 

பிழையாக்கும் 

எனக்கு 

நான் 

யாதாவேன்...


தேடலில் 

தொலைவது 

நானா? 



Thursday, July 5, 2018

ஒளிந்துகொள்ள
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒற்றை கவிதையை ...

Tuesday, May 31, 2016


யாதுக்காய் அவதானித்தேன்
கேட்க வைத்து விடுகிறீர்கள்
அடிகடி

கதவிடுக்கில் கைவிரல் போல
நைந்து போன வெறுமையில்
எதை கற்பேன் நான்

இயல்புகலற்ற பயணத்தில்
விதிகளற்று வீழ்கிறேன்

அர்த்தங்கலோடே
அர்த்தமற்று  இருக்கிறேன்

சிதறிய வார்த்தைகளிலும்
சிதறாமல் வெறுமை

தேடி தேடி தொலைக்கிறது
இந்த வெறுமை
என்னை 

Friday, January 29, 2016



திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

உங்களில் நிரம்பி கொள்ளவும்
உங்களால் நிறைத்து கொள்ளவும்
திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

இயல்பு இது என்பதால்
இயல்பில்லாதவனாய்  ஆகி விடுகிறேன்

ஊர்வதில் தொடங்கி
வறண்டு விடுவது வரை
திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

என்ன மிச்சமிருகிறது
என்பதே மிச்சமாய் இருப்பதால்
திரவமாகவே தீர்ந்து விடுகிறேன்

Sunday, May 17, 2015


நெடுநாளைக்கு பின்னாளான
 உன் புகைப்படத்துடன் ஆன
சந்திப்பிலும்
இயல்பாய்
இருக்க விடவில்லை
நீ